22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

மீண்டு எழுந்த இந்திய சந்தைகள்

இந்திய பங்குச்சந்தைகளில் 7 நாட்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை ஏற்றம் காணப்பட்டது. வர்த்தகம் தொடங்கியதும் ஆயிரம் புள்ளிகள் வரை உயர்ந்த மும்பை பங்குச்சந்தை பிற்பகலில் சரிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 239 புள்ளிகள் உயர்ந்து 77ஆயிரத்து578 புள்ளிகளாக வணிகம் முடிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 64 புள்ளிகள் உயர்ந்து 23,518 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது.M&M, Trent, Tech Mahindra, HDFC Bank, Eicher Motors உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் கண்டன SBI Life Insurance, HDFC Life, Tata Consumer,Hindalco உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. ஊடகம், ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், மருந்துத்துற பங்குகள் அரை முதல் இரண்டரை விழுக்காடு உயர்ந்தன.உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, பொதுத்துறை வங்கிகள் துறை பங்குகள் தலா அரை விழுக்காடு சரிவை கண்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து மீண்டும் 57 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.திங்கட்கிழமை 480 ரூபாய் உயர்ந்த தங்கம், செவ்வாய்க்கிழமை மேலும் 560 ரூபாய் அதிகரித்தது. ஒரு கிராம் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 65 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 560 ரூபாய் உயர்ந்து 56 ஆயிரத்து 520 ரூபாயாக விற்பனையாகிறது.வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து 101 ரூபாயாகவும். கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *