உயர்ந்து விழுந்த இந்திய சந்தைகள்..
அக்டோபர் 9 ஆம் தேதியான புதன்கிழமை லாபத்தை நோக்கி திரும்பிய பங்குச்சந்தைகள் பிற்பாதியில் சரிந்தன. புதன்கிழமை மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 167 புள்ளிகள் குறைந்து 81,467 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 31 புள்ளிகள் குறைந்து வணிகத்தை 24,982 புள்ளிகளில் முடித்தன. Trent, Cipla, Tata Motors, SBI, Maruti Suzuki உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்வில் முடிந்தன. ITC, Nestle, Reliance Industries, ONGC, HUL,உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை கண்டன. எஃப்எம்சிஜி, எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை பங்குகளைத் தவிர்த்து மற்ற துறை பங்குகள் ஓரளவு சமாளித்தன. Akzo Nobel, Bosch, Cipla, Coforge, Divis Labs, Dixon Technologies, Glenmark Pharma, Hitachi Energy, Infosys, Ipca Labs, Lloyds Metals, MCX India, Page Industries, Polycab India, Symphony, Torrent Pharma, Torrent Power, Trent உள்ளிட்ட 180க்கும் அதிகமான நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டன. புதுப்புது உச்சங்களை தொட்டு வந்த ஆபரணத்தங்கம் விலை அக்டோபர் 9ஆம் தேதி புதன் கிழமை சவரனுக்கு 560 குறைந்து விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் 70 ரூபாய் விலை குறைந்து 7ஆயிரத்து 30 ரூபாயாகவும், ஒரு சவரன் 56 ஆயிரத்து 240 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 100 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 2 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒருலட்சம் ரூபாயாக கட்டி வெள்ளி விற்கப்படுகிறது. இங்கே குறிப்பிட்டுள்ள விலைகளுடன் எல்லா கடைகளிலும் தங்கம்,வெள்ளிக்கு நிலையான 3 விழுக்காடு ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்