வரலாற்றிலேயே இல்லாத அளவு சரிந்த ரூபாய் மதிப்பு..
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றிலேயே இல்லாத வகையாக 84ரூபாய் 39 பைசாவாக சரிந்துள்ளது. பிராந்திய ரீதியிலான பணங்களின் மதிப்பு குறைந்து வருவதாலும், உள்ளூர் மக்கள் தங்கள் முதலீடுகளை மாற்ற முடியாமல் சிக்கலை சந்தித்து வருகின்றனர். எண்ணெய் நிறுவனங்கள் டாலரில் பணத்தை செலுத்தசொல்வதும், வெளிநாட்டு வங்கிகள் எண்ணெய்க்கு நிகராக அமெரிக்க டாலர்களை செலுத்தச் சொல்வதால் இந்திய ரூபாய்க்கான மதிப்புக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. 2.5பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கான நிதியை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து இதுவரை எடுத்துள்ளனர். கடந்த அக்டோபரில் இதே பாணியில் 11 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீட்டாளர்கள் எடுத்துள்ளனர். இந்தியாவின் பணம் மட்டுமின்றி ஆசியாவின் பெரும்பாலான பணத்தின் மதிப்பு குறைந்தே காணப்பட்டன. குறிப்பாக அமெரிக்க டாலரின் மதிப்பு 0.3%உயர்ந்த நிலையில் ஆசிய பணத்தின் மதிப்பு 0.1 விழுக்காடு முதல் 0.6 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. இந்திய ரூபாய் போலவே சீனாவின் யுவானும் கணிசமாக சரிந்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை சீனா பொருளாதார ஊக்கத் தொகையை அளிவித்திருந்தது எனினும் முதலீட்டாளர்கள் இதுவரை ஆர்வம் காட்டவில்லை.