அபாரமாக மீண்ட இந்திய பங்குச்சந்தைகள்…
இந்திய பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை அபார வளர்ச்சி காணப்பட்டது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் உலகளாவிய சாதக சூழலால் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 762 புள்ளிகள் உயர்ந்து 62 ஆயிரத்து 272 புள்ளிகளாக முடிந்தது முக்கியமான 30 பங்குகள் பட்டியலில் 900 புள்ளிகள் உயர்ந்தது தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 216 புள்ளிகள் உயர்ந்து 18 ஆயிரத்து 484 புள்ளிகளாக உயர்ந்தது இன்று ஒரே நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தவர்களுக்கு 2 லட்சத்து 46 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது. மும்பை பங்குச்சந்தையின் சந்தை மதிப்பு 283 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்க இருப்பதால் அமெரிக்க சந்தைகளும், இந்திய சந்தைகளிலும் சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இந்தியா மட்டுமின்றி ,தென்கொரியா,ஜப்பானிய பங்குச்சந்தைகளும் உயர்வை சந்தித்துள்ளன. கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளதால், முதலீட்டாளர்கள் கவனம் பங்குச்சந்தை பக்கம் திரும்பியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் சற்று உயர்ந்து 81 ரூபாய் 63 பைசாவாக வலுபெற்றுள்ளது.