வரலாறு படைத்த இந்திய பங்குச்சந்தைகள்..
வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட் கிழமை (செப்டம்பர் 23 -ல்) இந்திய பங்குச்சந்தைகள் நல்ல முன்னேற்றம் அடைந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 384 புள்ளிகள் உயர்ந்து 84,928 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி148 புள்ளிகள் உயர்ந்து 25,939புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. M&M, ONGC, Bajaj Auto, SBI Life Insurance, Hero MotoCorp நிறுவன பங்குகள் பெரிய அளவில் விலை உயர்ந்து வர்த்தகத்தை முடித்தன.
இதேநேரம் Eicher Motors, Divis Labs, ICICI Bank, Tech Mahindra and IndusInd வங்கி ஆகிய நிறுவனங்கள் பெரிய சரிவை கண்டன. Aditya Birla Fashion, Amber Enterprises, Apollo Hospitals, Asahi India, Bajaj Auto, Bajaj Finserv, Bharti Airtel, Bikaji Foods, Blue Star, Divis Labs, Hero MotoCorp, HUL, Kalyan Jeweller, Kotak Mahindra Bank, Lloyds Metals, M&M, Mankind Pharma, Max Financial, Shyam Metalics, Sun Pharma, Suven Pharma, United Spirits, V-Mart Retail, உள்ளிட்ட 350 நிறுவன பங்குகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சம் தொட்டன. பொதுத்துறை வங்கிப் பங்குகள் 3 விழுக்காடுக்கும் அதிகமாக உயர்ந்தும், ரியல்எஸ்டேட்துறை பங்குகள் 2 விழுக்காடு வரையும் ஏற்றம் கண்டன. ஆட்டோமொபைல், ஆற்றல், உலோகம், மருந்து, ஊடகத்துறை பங்குகள் அரை முதல் 1 விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. தகவல் தொழில்நுட்படத்துறை பங்குகள் அரை விழுக்காடு சரிந்தன. செப்டம்பர் 23ஆம் தேதி திங்கட்க் கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 55ஆயிரத்து 840 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் 20 ரூபாய் உயர்ந்த தங்கம் 6 ஆயிரத்து 980 ரூபாயாக விற்கப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் 98 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கட்டி வெள்ளி விலை கிலோ 98 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்