இந்தியாவின் கடன் அதிகரிப்பு:
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த கடன் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதன்படி நாட்டுக்கு வெளியில் உள்ள கடன் 8 விழுக்காடு உயர்ந்து 620.7பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக உயர்ந்துள்ளது. குறுகிய கால கடன் 20% உயர்ந்துள்ளது. நாட்டின் மொத்த வெளிப்பகுதி நீண்டகால கடன் கடந்த மார்ச் 2021ல் இருந்ததை விட 5.6% அதிகமாகும்.
மொத்த கடனில் அமெரிக்க டாலர் தொடர்பான கடன் மட்டும் 53.2% ஆக இருக்கிறது. மொத்த 620பில்லியன் டாலர் கடனில் நீண்டகால கடன் 499பில்லியனாகவும் , குறுகியகால கடன் 121பில்லியன் டாலர் ஆகவும் உள்ளது.
திருப்பி செலுத்த வேண்டிய கடனில் அமெரிக்க மதிப்புக்கு அடுத்ததாக இந்திய ரூபாய் மதிப்பில் செலுத்த வேண்டிய தொகை 31.2%ஆக உள்ளது .