இந்தியாவின் மெகா திட்டம்!!! என்ன தெரியுமா??
இந்தியாவில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் துவங்கப்பட்டு பாதி அளவே முடிந்துள்ளன, இதில் உள்ள பிரச்னைகளை சரிசெய்ய மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. இதற்காக 100கோடி ரூபாய் செலவில் கதி சக்தி என்ற திட்டத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது. இந்த திட்டத்தின்படி 16 அமைச்சகங்கள் ஒன்றாக இணைக்கப்படும்.
டிஜிட்டல் தளமாக இந்த ஒருங்கிணைந்த தளம் அமைய இருக்கிறது.
இந்த டிஜிட்டல் தளத்தில் முதலீட்டாளர்கள் முதல் நிறுவனங்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்க வழிவகுக்கப்படுகிறது.
உலகில் உள்ள நிறுவனங்கள் இந்தியாவை உற்பத்தி கேந்திரமாக மாற்ற வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சக சிறப்பு செயலாளர் அம்ரித் லால் மீரா கூறுகிறார்.
உலகின் பல நாடுகளும் சீனாவை மட்டும் நம்பாமல் சீனா பிளஸ் 1 என்ற திட்டத்தில் கவனம் செலுத்துகின்றன. இந்த வகையில் சீனாவுக்கு அடுத்த இடம் இந்தியாவுக்கு கிடைக்கிறது.
ஆசியாவின் 3வது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் குறைவான சம்பளத்தில் அதிக வேலை,ஆங்கிலம் சரளமாக பேசக்கூடிய பணியாளர்கள் உள்ளிட்ட காரணிகள் இந்தியாவின் பக்கம் கவனத்தை ஈர்த்துள்ளன.
கதி சக்தி திட்டத்தின் மூலம் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் சரக்குகள் எளிமையாக கையாள முடியும். டிஜிட்டல் மயமாக்கப்படும் திட்ட அறிக்கைகள் காரணமாக அனைத்து தரப்பு பணிகளும் எளிமையாக்கப்படும் என்பதால் சீனாவை விட இந்தியாவில் அதிக முதலீடுகளை ஈர்க்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது