இந்தியாவின் அதிக காஸ்ட்லி பங்கு MRF…
இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் ஒரு பங்கின் விலை 1.5 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவை எட்டிய நிறுவனம் என்ற நிலையை MRFநிறுவனம் ஜனவரி 17ஆம் தேதி மதியம் எட்டியது. மதியம் 2 மணியளவில் இந்த பங்குககள் 1.37 லட்சம் ரூபாய் என்ற அளவில் விற்பனையானது. கடந்தாண்டு மட்டும் இந்த நிறுவனத்தின் பங்குகள் 48 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்தது. அதாவது 53 விழுக்காடு வளர்ச்சியாகும். அந்நிறுவனத்தின் 2 ஆவது காலாண்டில் லாபம் மட்டும் 5 மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது இரண்டாவது காலாண்டு லாபம் மட்டும் 572 கோடி ரூபாயாகும். அதற்கு முந்தய காலாண்டில் வருமானம் வெறும் 124 கோடி ரூபாயாக இருந்தது. மிகப்பெரிய வருவாய் கிடைத்தது. அந்நிறுவன வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
இந்த நிறுவனத்தின் வருமானம் என்பது ஓராண்டில் 6.5விழுக்காடு உயர்ந்திருக்கிறது. எளிதாக சொல்லவேண்டுமானால், 5,719 கோடி ரூபாயாக இருந்த வருமானம் ஓராண்டில் 6,088 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. மெட்ராஸ் ரப்பர் பேக்டரியான MRFநிறுவனம் அடுத்தடுத்து பல மைல்கல்களை எட்டி வருவது அதில் முதலீடு செய்தவர்கள் மத்தியில் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.