லாபக் கணக்கு கேட்கும் மத்திய அரசு..

இந்தியாவில் இயங்கி வரும் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசின் வரித்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் லாபம் மற்றும் அதன் கிளை நிறுவனங்களின் கணக்குகளையும் தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளது. வருமான வரித்துறையின் பணப்பரிமாற்றப்பிரிவு இந்த அறிக்கையை அளித்துள்ளது. லண்டன், நியூயார்க்கை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் கிளைகளை தொடங்கி, இங்கு முதலீடு செய்த பணத்தின் ஒரு பகுதியை தங்கள் நாட்டுக்கு சிங்கப்பூர், மொரீசியஸ் வழியாக எடுத்துச்செல்லப்படுவதாக கூறப்படுகிறது. முறையான கணக்கு உள்ளதா என்பதை வரித்துறை ஆய்வுக்கு உட்படுத்த இருக்கிறது. குறைவான தொகையை மக்கள் செலுத்தினால் வருவாயும் குறைவாகவே இருந்திருக்கும் என்பதே வருமான வரித்துறையின் லாஜிக்காக இருக்கிறது. பங்குச் சந்தைகளில் அனைத்து தரப்பு தகவல்களும் வெளிப்படையாக இருக்கும் நிலையில், வெளிநாட்டு நிறுவனங்கள் எடுத்துச்செல்லும் பணத்திற்கு பெயர் கேரி. இந்த கேரி தொகை தனிப்பட்ட தகவல்களாகவே தொடர்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இதே பாணியில் பிரச்சனை வந்தபோதிலும் அதனை அப்போதைய வருமான வரித்துறை சரி செய்ததாகவும், தற்போது இந்த பிரச்சனை மீண்டும் வேகமெடுப்பதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உரிய வரி செலுத்தாமல் பெரிய தொகைகளை வேறுநாடுகளுக்கு எடுத்துச்செல்வது பெரிய சிக்கலையும், இந்தியாவுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாயையும் பாதிக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்.