தங்க இறக்குமதி அதிகரிப்பு..

இந்தியர்களுக்குத்தான் தங்கத்தின் மீது அத்தனை மோகம். தங்கத்தின் மீதான இறக்குமதி ஆண்டுக்கு ஆண்டு 331%உயர்ந்துள்ளது. நவம்பரில் மட்டும் இந்தியாவில் 15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 85 ரூபாயாக சரிந்துள்ளது. இறக்குமதி வரி 15 -ல் இருந்து 6%ஆக குறைக்கப்பட்டதும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பெரும்பாலான தங்கம் துபாயில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைக்கப்பட்டது முதல் தங்க இறக்குமதி கணிசமாக அதிகரித்து வருகிறது. ஜூலையில் 3.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த தங்கம் இறக்குமதி, ஆகஸ்ட் மாதம் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது. செப்டம்பரில் இது 4.4 பில்லியன் டாலராக குறைந்தது. அக்டோபரில் இது 7.1 பில்லியனாகவும் நவம்பரில் 14.9பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் 2,300 டாலராக இருந்த ஒரு அவுன்ஸ் தங்கம் நவம்பர் முதல் பாதியில் 2,700 டாலர் என்ற விலையை எட்டியது. இந்தியாவுக்கும்-ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே cepa என்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் பிறகுதான் அரபு நாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது. 2023-24 காலகட்டத்தில் அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த தங்கத்தின் மதிப்பு 10.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. தற்போது இது 210 %உயர்ந்துள்ளது.