மஹிந்திரா மீது இண்டிகோ வழக்கு..
இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா அண்மையில் தனது மின்சார கார்களை அறிமுகப்படுத்திய நிலையில் அந்த கார்களுக்கு வைத்த பெயரால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. பிரபல விமான நிறுவனமான இண்டிகோ, தனதுவிமானங்களில் 6இ என்ற குறியீட்டை வைத்திருப்பது வழக்கம். 6இ என்ற பெயரை அண்மையில் வெளியிட்ட கார்களில் ஒன்றுக்கு மஹிந்திரா நிறுவனம் சூட்டியுள்ளது தங்கள் காப்புரிமையை மீறிய செயல் என்று இண்டிகோ வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு வரும் 9 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. மஹிந்திரா பி.இ. 6இ கார்கள் அண்மையில் காட்சிபடுத்தப்பட்டபோதும், வரும் பிப்ரவரியில் தான் சந்தைக்கு வர இருக்கிறது. 6இ என்ற இணைப்புக்கு 2015 ஆம் ஆண்டு இண்டிகோ விமான நிறுவனம் காப்புரிமையை பெற்றது. இந்த நிலையில் தங்கள் நிறுவனம் வெறும் 6இ என்று பெயரிடவில்லை என்றும் பி.இ. 6இ என்றுதான் பெயரிட்டு உள்ளதாகவும் மஹிந்திரா நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.