திரும்பி பார்க்க வைத்த இலங்கை
இலங்கையில் கடந்த நவம்பரில் நுகர்வோர் பொருட்களிந் விலை 2.1 விழுக்காடு குறைந்துள்ளது. இலங்கை வரலாற்றிலேயே 1961 ஆம் ஆண்டுக்கு பிறகு நவம்பர் மாதத்தில் இத்தனை பெரிய விலை வீழ்ச்சி ஏற்பட்டதே இல்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு போதிய அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் இலங்கை தடுமாறியது. பணவீக்க விகிதம் 70 விழுக்காடு வரை தொட்டது. அது முதல் 2.9பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை சர்வதேச நாணய நிதியம் கடனாக கொடுத்து உதவியது. வரிகள் உயர்வு, சிக்கன நடவடிக்கைகளை கையாண்ட இலங்கை , பொருளாதாரத்தில் மெல்ல மீண்டு வந்தது. தற்போதும் பொருளாதாரம் பெரியளவில் மீளவில்லை என்றாலும் , அடுத்த சில மாதங்களில் இலங்கையின் பணவீக்கம் 5 % என்ற அளவை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் மற்றும் செப்டம்பரில் முறையே 0.8 மற்றும் 0.5%ஆக விலை வீழ்ச்சி விகிதம் மீண்டது. கடந்த செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அதிபரான நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டுப்பாடுகளுக்குள் வரி வரம்புகளை கொண்டுவந்துள்ளார். இலங்கையின் அரசு சார்ந்த செலவுகளை குறைத்து, அதே நேரம் அதிக வரி விதிக்கவும் அநுர திட்டமிட்டுள்ளார்.