சொகுசு வாழ்க்கை வேண்டாமாம்…
இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி அண்மையில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசியது வேகமாக பரவி வருகிறது.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாராயணமூர்த்தி, கார்பரேட் தலைவர்கள் தங்கள் ஊழியர்களுக்கு எதுவும் செய்வதில்லை என்றும், கடை மட்டத்தில் இருக்கும் ஊழியரின் முன்னேற்றத்தில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் நாராயணமூர்த்தி கூறினார். ஊழியர்கள் கஷ்டப்படும்போது முதலாளிகள் சொகுசான வாழ்க்கை வாழ வேண்டாம் என்றும் அவர் விமர்சித்தார்.
இந்திய கலாச்சாரத்தில் வீட்டில் உள்ள தாயும் தந்தையும் கடைசியாகத்தான் சாப்பிடுவார்கள் என்பதைப்போலவே, ஊழியர்களை முதலில் கவனித்துவிட்டு,கடைசியில் யோசிப்பவர்களே தலைவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். ஊழியர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதையும், அவர்களின் உடல்நலத்தையும் பார்த்துக்கொள்வது அவசியம் என்றும் கூறியுள்ளார். வெறும் வாக்குறுதியாகவோ, அறிவுரையாகவோ சொல்லாமல், இந்திய குடும்பங்கள் பல ஆண்டுகளாக கடைபிடித்து வரும் முறையை மக்களுக்கு மீண்டும் அவர் ஞாபகப்படுத்துகிறார். இந்தியாவில் கிராமபுறங்கள் மற்றும் கல்வியில் பின்தங்கிய மக்களுக்கு வேலைவாய்ப்பை அளித்தால் நிலையான வளர்ச்சி கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் சீனாவின் மாடலை இந்தியா படிக்கவேண்டும் என்றார். ஏற்கனவே இருக்கும் தொழில்நுட்பத்தை முதலில் பயன்படுத்திவிட்டு அடுத்த நுட்பத்துக்கு செல்லலாம் என்றும் அவர் ஏஐ தொழில்நுட்பத்தை பற்றி விமர்சித்தார்.