ஷேர் பைபேக் அறிவிக்க உள்ள இன்போசிஸ் நிறுவனம்..
முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸின் நிதிநிலை அறிக்கை மற்றும் இரண்டாம் காலாண்டின் செயல்திறன் குறித்த அறிவிப்பு வரும் 13ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சூழலில் நிதி சூழல் குறித்தும், பங்குகளை நிறுவனமே திரும்ப வாங்கிக்கொள்ளும் நடைமுறை குறித்தும் தகவல் கசிந்துள்ளது. அதன்படி இன்போசிஸ் நிறுவனத்தின் 2வது காலாண்டு அறிவிப்பில் ஷேர் பைபேக் எனப்படும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஷேர் பைபேக் எனப்படுவது யாதெனில், நிறுவன வளர்ச்சிக்கும் விரிவாக்கத்துக்கும் பங்குச்சந்தைகளில் அளித்த முதலீடுகளுக்கு பதிலாக நிறுவனம் மீண்டும் பங்குதாரர்களுக்கு பணத்தை அளித்துவிடும், இன்போசிஸ் நிறுவனம் 4 %வளர்ச்சி அடைந்திருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது
ஐடி நிறுவனத்தில் பணியாளர்களின் சம்பளம்,நிர்வாக செலவு,உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் ஒவ்வொரு காலாண்டிலும் அறிக்கை அளிக்கப்படுகிறது.
இன்போசிஸ் நிறுவனம் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் நடப்பாண்டில் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலை 26% வீழ்ச்சியை கண்டுள்ளது. இந்த சூழலில் இரண்டாம் காலாண்டு நிலை அறிக்கை அந்த நிறுவன பங்குகளின் விலை உயர்த்தப்படுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்