சீனப்பொருட்கள் பற்றி விசாரணை..
சீனாவில் இருந்து 6 பொருட்களை இந்தியாவுக்குள் சிலர் இறக்குமதி செய்திருப்பதாக மத்திய அரசுக்கு புகார் சென்ற நிலையில் அது பற்றி விசாரணையை அரசு தொடங்கியிருக்கிறது. கோல்ட் ரோல்டு மின்சார ஸ்டீல், பிளாக் டோனர் பவர் கேட்ரிட்ஜ்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.உள்ளூர் வணிகர்களிடம் இருந்து வந்த புகார்களை அடுத்து இந்த விசாரணை தொடங்கியுள்ளது. Tetrafluoroethane,Acrylonitrile Butadiene Rubber, polytetrafluoroethylene உள்ளிட்ட ரசாயனங்கள் இதில் முக்கியமானவை. குறிப்பிட்ட இந்த பொருட்கள் சீனாவில் இருந்து சட்டவிரோதமாக வந்துள்ளதாகவும், முறையான வரி இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்டதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் உள்ளூர் வணிகர்கள் புகார் தெரிவித்தனர். இந்திய வணிகபிரிவின் இயக்குநர் இது பற்றிய புகார்கள் பெற்ற உடனே விசாரணையை தொடங்கியுள்ளார். எனினும் சீனாவில் இருந்து இந்தியாவுக்குள் வந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிப்பது என்பது பற்றி நிதியமைச்சகம்தான் இறுதி முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவும் சீனாவும் உலக வர்த்தக அமைப்பின் இரு உறுப்பினர்களாக இருக்கும் நிலையில், உள்ளூர் வணிகத்தை பாதிக்கக் கூடாது என்பதே ஒப்பந்தமாக உள்ளது. இந்நிலையில், ஒப்பந்தத்தை மீறி இருநாடுகளும் செயல்படும்பட்சத்தில் ஆன்ட்டி டம்பிங் வரி விதிக்கப்படும். இந்த வரியால், உள்ளூர் வணிகர்கள் காப்பாற்றப்படுவர்.