IRDAI-க்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கோரிக்கை..

இந்தியாவில் காப்பீடுகள் தொடர்பான ஒழுங்குமுறை அமைப்பாக irdai அமைப்பு திகழ்கிறது. இந்த அமைப்புக்கு பொது காப்பீட்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு 53 %வரை கமிஷன் தொகை அளிக்கும் மோட்டார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மட்டுமின்றி வாகன உற்பத்தி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இவ்வாறு குறைவான விலையில் காப்பீடு வழங்குவதால் தனியார் காப்பீடுகளை கார் வாங்குவோர் எடுக்கும் சூழல் உருவாகுவதாக கூறப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு IRDAI விதியில் சில வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளதாகவும், MISP எனப்படும் மோட்டார் வாகன காப்பீடு வழங்கும் நிறுவனங்களை ஆட்டோமொபைல் டீலர்கள்தான் முடிவு செய்யவேண்டும் என்ற விதி உள்ளது. கார் உள்ளிட்ட வாகனங்கள் வாங்கும்போது குறிப்பிட்ட ஒரு நிறுவன காப்பீடு மட்டும் தராமல், தங்கள் வசம் உள்ள அனைத்து காப்பீடு நறுவனங்களின் பட்டியலையும் வழங்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு எது பிடிக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளட்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் irdai அமைப்பு இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், ஒரே நிறுவனம் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு irdai கடிவாளம் போடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.