தேர்தலுக்கு பிறகு முதலீடு கொட்டுமாம்…
இந்தியாவில் 7 கட்டங்களாக பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கு பிறகு இந்திய சந்தைகளில் முதலீடுகள் அதிகளவில் வரும் என்று பிரபல நிறுவனமான ஜேபி மார்கன் கணித்திருக்கிறது. இந்தியாவில் நிலையான வளர்ச்சி மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வின் வரி குறைப்பு உள்ளிட்ட காரணிகளும் இந்திய சந்தைகளில் உயர்வுக்கு முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது. இந்தியாவில் மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழல் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. மீண்டும் ஆட்சிமாற்றம் ஏற்படாமல் இருந்தால் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு நல்ல ஏற்றம் கண்ட இந்திய சந்தைகள் இந்த முறை சிறிய மற்றும் நடுத்தர பங்குகள் தொடர் சரிவை சந்தித்து வருவதும் பெரிய சிக்கலாக கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. உலகளவில் இந்தியாவின் மீதான பார்வையும் உலகளவிலான நிதி முதலீடுகளும் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.