22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

முதலீட்டாளர்களை பாதுகாக்க புது முயற்சி..

இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த சில நாட்களாக சரிவு தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் சரிவின்போது முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க செபி புதிய முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. சில்லறை வர்த்தகம் மற்றும் உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்யும் அமைப்புகளுக்காக இந்த புதிய முயற்சி செய்யப்படுகிறது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முறையிலும், எளிதாக வளைந்துகொடுக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை செபி தயாரித்து வருகிறது.
சிறு குறு அளவில் முதலீடு செய்வோரின் வட்டி மற்றும் ஹெட்ஜ் நிதிகளில் வட்டி விகிதம் ஏற்ற இறக்கத்துக்கு செபி இசைவு தெரிவித்துள்ளது பிக்ஸ்டு டெபாசிட் தொகைகளை ரொக்கப்பணமாக கருதும் வகையிலும் புதிய விதி மாற்றப்படுகிறது. லாக்டு இன் ஆக வைத்திருக்கும் யூனிட்களை ஸ்பான்சர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசு விதிகளும் திருத்தி அமைக்கப்பட இருக்கிறது. பொதுவான உள்கட்டமைப்பு வசதிகளான ஆற்றல் உற்பத்தி நிலையம் மற்றும் நீர்நிலைத் திட்டங்களுக்கு பல்வேறு முதலீடுகளை அளிக்கும் புதிய திட்டமும் உள்ளது. லிக்விட் பரஸ்பர நிதியை அறிமுகப்படுத்தவும் செபி திட்டமிட்டு பணிகளை செய்து வருகிறது. இந்த புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வரும் 13 ஆம் தேதி கடைசி நாளாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *