பணவீக்கத்தால் தவிக்கிறதா அமெரிக்கா?
நம்மூரில் உள்ள ரிசர்வ் வங்கி போல அமெரிக்காவில் உள்ள பெடரல் ரிசர்வ் வங்கி , கடன்களின் வட்டி விகித்தை தீர்மானிக்கிறது. கடந்த இரண்டு முறை நடந்த பெடரல் ரிசர்வின் கூட்டத்தில் கடன்கள் மீதான வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் 3 ஆவது முறையாக வட்டி வகிதம் குறைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை 25 அடிப்படை புள்ளிகளை அந்த வங்கி குறைக்க இருக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போது அந்நாட்டு கடன் வட்டி விகிதம் 4.5-4.75% ஆக இருக்கிறது. இதில் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 4.25-4.5% வரை குறைக்கப்பட இருக்கிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 1 மணிக்கு ஜெரோம் பாவலின் அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இந்த முறை வட்டி குறைப்பு 25 அடிப்படை புள்ளிகளாக உள்ளபோதும், பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா தடுமாறி வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஜனவரி மாதம் இதற்கான வாய்ப்பு குறைவு என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் அடுத்த மாதம் பதவியேற்க இருக்கும் நிலையில், பாவெலின் இந்த அறிவிப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டிரம்ப் ஆட்சிக்கு வந்ததும் என்ன அதிரடி முடிவுகள் வரப்போகிறதோ என்ற அச்சம் அமெரிக்கர்கள் மத்தியில் நிலவி வருகிறது.