செப்டம்பரில் படையெடுத்த ஐபிஓக்கள்..
இந்திய பங்குச்சந்தைகளில் தங்கள் ஐபிஓகளை வெளியிட மொத்தம் 41 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. செபியின் முன்பு 41 நிறுவனங்களின் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 67 நிறுவனங்கள் தங்கள் drhp ஆவணங்களை அளித்துள்ளன. இந்தியாவில் இந்தாண்டு இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட 239 ஐபிஓகளில் 175 நிறுவனங்கள் வெளியீட்டு மதிப்பை விட அதிகமாகவே முதலீடுகளை ஈர்த்துள்ளன. 33 நிறுவனங்கள் எதிர்பார்த்ததை விட குறைவான தொகையை முதலீடுகளாக ஈர்த்துள்ளன. செப்டம்பர் 30 ஆம் தேதி வரையிலான நிலவரத்தின்படி, 183 நிறுவன ஐபிஓகள், மிகப்பெரிய ஏற்றத்தை கண்டன. NTPC Green, Hexaware Technologies, Vikram Solar, Aditya Infotech, Varindera Construction, Vikran Engineering, Mauri Tech உள்ளிட்ட நிறுவனங்கள் லாபகரமாக இருந்தன. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்று 35 நிறுவனங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக பணம் தரும் வகையில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 30 ஆம் தேதி தரவுகளுடன் ஒப்பிடுகையில் 114% உயர்வு ஐபிஓக்கள் பிரிவில் ஏற்பட்டுள்ளது. செபி தரவுகளின்படி இதில் பாதி தொகை சில்லறை வணிகர்கள் முதலீடு செய்தது தான் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 67.6% அளவுக்கு பங்குகளை ஒரு வாரத்துக்குள்ளேயே முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர். ஐபிஓ வெளியிட கடந்த 30 ஆம் தேதி வரை செபியின் ஒப்புதலை பெற்ற 5 பெரிய நிறுவனங்கள் ஒப்புதல் பெற்றுள்ளன. அதில் குறிப்பாக விஷால் மெகாமார்ட், acmeசோலார் ஹோல்டிங்ஸ், மமதா மெஷினரி, ஹியூண்டாய் மோட்டார் இந்தியா, ஸ்விகி ஆகிய இந்த நிறுவனங்களின் ஐபிஓகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.