காப்புரிமை விதிகளை மாற்றுகிறது ஐஆர்டிஏஐ…

இந்தியாவில் காப்புரிமை ஒழுங்குமுறை அமைப்பாக உள்ளது IRDAI. இந்த அமைப்பு இந்தியாவில் உள்ள காப்புரிமை நிறுவனங்களில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து அவ்வப்போது அறிவிப்பு வெளியிடுகிறது.
புதிய இன்சூரன்ஸ் பாலிசிகளை டிஜிட்டல் மயப்படுத்த அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து 20ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
E-proposal படிவம் முக்கியம் என்பதை இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது
மின்னணு காப்புரிமை திட்டங்களில் சலுகை வழங்க வேண்டும் என்றும்,ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு சலுகைகள் அளிப்பது குறித்தும் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன.
காப்புரிமை நிறுவனங்களில் செய்ய வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் மக்களுக்கு இந்த அமைப்பு விரிவான விளக்கத்தை அவ்வப்போது அளித்து வருகிறது
மின்னணு முறையில் தகவல்களை சரிபார்க்கவேண்டும் என்றும் ஐஏஆர்டிஐ தெரிவித்துள்ளது. அதாவது ஆதார் அடிப்படையிலான தரவுகள் ஓடிபி எனப்படும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட் மூலம் காப்பீட்டு நிறுவனங்கள் விவரங்களை சரிபார்க்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல் பாலிசி வைத்திருப்போருக்கு மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது