வோடஃபோனில் முதலீடு செய்கிறதா அக்சன்சர்..?
இந்திய போட்டி ஆணையம், கடந்த புதன்கிழமை ஒரு ஒப்புதலை அளித்துள்ளது. அதில் வோடஃபோன் நிறுவனத்தின் செயல்பாடுகளில் பிரபல நிறுவனமான அக்சென்சர் முதலீடு செய்ய இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பரில் வோடஃபோன் நிறுவனத்துடன் தினசரி செயல்பாடுகளில் அக்சென்சர் இணைவதாக அறிவித்தது. டப்ளினை அடிப்படையாக கொண்டு இயங்கும், ஐடி நிறுவனம், 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டை செய்ய இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு நுட்பத்தையும் வோடஃபோன் நிறுவனத்தில் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வோடஃபோன் நிறுவனத்துக்கு கீழ் இயங்கும் Mitsui & Co என்ற நிறுவனத்தில் இந்த முதலீடு செய்யப்படுகிறது. இந்த நிறுவனம் ஜப்பானை அடிப்படையாக கொண்டதாகும். வோடஃபோன் நிறுவனத்திற்கு கீழ் இயங்கி வரும் Mitsui & Co நிறுவனத்தில் முதலீடு செய்யத்தான் தற்போது இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவில் MTC பிஸ்னஸ் எனப்படும் உலோகம் சார்ந்த பணிகளையும் செய்து வருகிறது.