வேட்டிய மடிச்சிகட்டி களமிறங்க போறாரா அம்பானி?
பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானி கடந்தாண்டு ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தில் பெரிய அறிமுகம் மற்றும் லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் ஆனால் நடந்ததோ வேறாக இருக்கிறது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பீடு கடந்தாண்டு 9 விழுக்காடு வரை குறைந்துவிட்டது. இதனால் கடுப்பான அம்பானி இந்தாண்டில் முடிக்காமல் உள்ள வேலைகளை முடிக்கப்போகிறாராம். ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீட்டெயில் ஆகிய இரண்டில் ஏதோ ஒன்றை பங்குச்சந்தையில் பட்டியலிடவே முகேஷ் அம்பானி முக்கியத்துவம் அளித்து வருகிறாராம். மேலும் 37லட்சம் பங்குதாரர்களுக்கு பதில் சொல்லவேண்டியுள்ளது. ஜியோவையும், ரிலையன்ஸ் ரீட்டெயலையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்ப்பதாக அம்பானி க்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி ரிலையன்ஸ் ஜியோவின் சந்தாவை உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். அதாவது தற்போதுள்ள விலையை விட 20விழுக்காடு வரை விலை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். வாடிக்கையாளற்கள் சார்ந்த பிராண்ட் பிஸ்னஸில் அதிக கவனம் செலுத்த இருக்கிறாராம் அம்பானி, குறிப்பாக கேம்பா கோலா, சோஸ்யோ, டாபிமேன் போன்ற பிராண்டுகளை மையப்படுத்தி பணிகளை அம்பானி செய்து வருகிறார். உலகளவில் முக்கியமான 12 பங்குகள் பட்டியலில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளும் இடம்பிடித்துள்ளதாக clsaஅறிக்கை தெரிவிக்கிறது.