குறைகிறதா இந்தியாவின் ஜிடிபி..?
உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இந்திய பனியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம் என்பது கடந்த காலாண்டில் குறைந்திருக்கிறது. பெருந்தொற்று நேரத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு பிறகு முதல் முறையாக இது குறைந்திருக்கிறது. தொழிலாளர்களுக்கு அளிக்கும் தொகை அதிகரிப்புக்கு விலைவாசி உயர்வும் காரணமாக உள்ளது. கடந்தாண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தை ஒப்பிடும்போது இது 0.5விழுக்காடு குறைவாகும். மோட்டிலால் ஆஸ்வால் நிதி நிறுவன தரவுகளும் இந்தியாவில் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம் குறைந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது. நகர்புறங்களில் வசிக்கும் நடுத்தர மக்களுக்கு நிதிச்சுமை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த நிதியாண்டில் பொருளாதாரம் 8 விழுக்காடுக்கும் அதிகமாக வளர்ந்திருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வருவாய் சிக்கல் இருப்பதால் புதிதாக சோப்புகள், கார்கள் உள்ளிட்டவற்றை மக்கள் வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். மாருதி சுசுகி கார் முதல் இந்துஸ்தான் யுனிலிவர் வரை அனைத்தும் சரிவை கண்டுள்ளன.
தேசிய பங்குச்சந்தை நிஃப்டியில் உள்ள 50 நிறுவனங்களும் தாங்கள் எதிர்பார்த்த வருவாயை நிறுவனங்கள் ஈட்டவில்லை என்பதை ஒப்புக்கொள்கின்றன. வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் இந்த தரவுகள் அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு செப்டம்பர் மாதம் மிகக்கடுமையான சரிவுகளை இந்தியா சந்தித்துள்ளதாக எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 3 மாதங்களில், தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் செலவுகள் 3.3விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக முன்னணி டெக் நிறுவனங்களான டிசிஎஸ், எச்சிஎல், உள்ளிட்ட நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. பொருளாதாரமும் தனிநபர் வருவாயும், நாட்டின் உள்நாட்டின் உற்பத்தி சரிந்திருப்பதை ஏற்கத்தான் வேண்டும் என்றும் சிலர் அரசை குறைகூறி வருகின்றனர். தொழில்துறை வளர்ச்சி சரியும்போது, கிராமபுற நுகர்வு மற்றும் விவசாயம் சரி செய்ய வேண்டும் ஆனால் அதுவும் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சியை பெறவில்லை