ஜிடிபியில் 80%இதுதானா?
இந்தியாவில் கடந்த ஓராண்டில் 600 இந்திய வங்கிகள் சேர்ந்து 2.5டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளன. அதில் 80 விழுக்காடு ஸ்மார்ட்ஃபோன்கள் மூலமாகவே நடந்துள்ளன. நொடிகளில் பணத்தை மாற்றும் வித்தையில் இந்தியா சிறப்பான இடத்தில் இருக்கிறது. என்னதான் டிஜிட்டலில் பணம் அனுப்பினாலும் குறைந்தபட்சம் கொஞ்சமாவது டிஜிட்டல் பணத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன்கள் அதிகரிப்பால் வங்கிகளுக்கு சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக கடந்தாண்டு மார்ச் மாதத்தில், சிலிக்கான் வேலி வங்கி உள்ளிட்ட வங்கிகளில் ஒரே நேரத்தில் 42 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு மக்கள் பணத்தை எடுக்க முயற்சித்ததால் அந்த வங்கியே திவாலாகிப்போனது. இந்தியாவில் அதே பாணியில் பிரச்சனைகள் வரக்கூடாது என்பதற்காக ரிசர்வ் வங்கி துரிதமாக இயங்கி வருகிறது. இந்தியாவில் 82 கோடி பேரிடம் இணைய வசதி கிடைத்துள்ளது. அதில் 27 கோடி பேரால் டிஜிட்டல் பேங்கிங்கும் செய்ய முடிகிறது. ஆனாலும் பல இடங்களில் இன்றும் வங்கிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிடவேண்டிய சூழல் இருக்கிறது. பணப்பரிவர்த்தனை என்று வரும்போது, ஆன்லைனில் பொருட்களை மக்கள் ஆர்டர் செய்தாலும் ரொக்கப்பணமாக செலுத்துவதில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். முன்பெல்லாம் வீடுகளில் இருக்கும் ரொக்கப்பணம் வங்கிகளில் டெபாசிட்டாக சேமிக்கப்பட்ட நிலையில் தற்போது அவை பரஸ்பர நிதி, பென்ஷன் தொகையாக கட்டுவதாகவும் புள்ளிவிவரம் கூறுகிறது. இந்தியாவில் பணப்பரிவர்த்தனை டிஜிட்டல் முறை ஆகிவிட்ட பிறகு 88 விழுக்காடாக இருந்த கடன் வாங்கும் விகிதம் தற்போது 114 விழுக்காடாக இருக்கிறது.