மரபியல் மருந்து நிறுவனத்தின் புதிய முயற்சி..

உலகளவில் மரபணு பாதிப்புகளுக்கு மருந்து தயாரிக்கும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்த சூழலில் பிரபல மருந்து நிறுவனமான எலி லில்லி, அண்மையில் மவுன்ஜாரோ என்ற புதிய மருந்தை உருவாக்கி உடல் எடை குறைப்பு, டைப்2 சர்க்கரை வியாதிக்கு அளிக்கப்படுகிறது.
இன்சுலினை விற்கும் இந்த நிறுவனம், கல்லீரல் பாதிப்பு, தூக்க பிரச்சனை, இதய செயலிழப்பு, மது குடிப்பதால் வரும் பிரச்சனைகளுக்கு 11 வகையான மருந்துகளை தயாரித்து வருகிறது. பார்கின்சன் மற்றும் அல்சைமர்ஸ் நோய்களை குணப்படுத்தும் புதிய மருந்துகளை கண்டுபிடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளை குணப்படுத்தும் ஊசியைஇந்த நிறுவனம் தயாரித்துள்ளது. மரபணு ரீதியில் இதய பாதிப்பை தடுக்க புதிய மருந்தையும் அந்நிறுவனம் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
எல்பிஏ அளவில் இருக்கும் நோய் பாதிப்புகள் குறித்து 3 கட்ட ஆய்வுகளை தங்கள் நிறுவனம் நடத்தி வருவதாகவும், எந்த வித உணவு கட்டுப்பாடுகளும் இல்லாமல் இந்த மருந்து குணப்படுத்த உதவுமா என்று மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். எலி லில்லி நிறுவனம் தனது இரண்டாவது மையத்தை ஐதராபாத்தில் திறந்துள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனத்துக்கு பெங்களூருவில் அலுவலகம் உள்ளது. உலகளாவிய ஆராய்ச்சி பணிகளில் 15 விழுக்காடு மட்டுமே இந்திய அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. தெலங்கானாவில் இந்த நிறுவனத்துக்காக ஆயிரத்து 500 பேரை புதிதாக வேலைக்கும் எடுக்க இருக்கின்றனர். அமெரிக்காவுக்கு வெளியே மிகப்பெரிய ஆய்வகத்தை இந்தியாவில் அமைக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.