மதிப்பை இழக்கிறதா மெட்டா நிறுவனம்…
அமெரிக்காவில் மிகப்பெரிய 20 நிறுவனங்களின் பட்டியலை அந்நாட்டு பங்குச்சந்தைகள் பட்டியலிட்டுள்ளன. ஒரு காலகட்டத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் முதலிடத்தில் இருந்தன. தற்போது அந்த நிறுவனத்தின் தாய் நிறுவனத்துக்கு மெட்டா என்று பெயர் அண்மையில் மாற்றப்பட்டது. இந்த நிலையில் 520 பில்லியன் டாலர் மதிப்பு சரிந்ததை அடுத்து முதல் 20 இடங்களில் இருந்தே மெட்டா நிறுவனம் வெளியேறும் சூழல் உள்ளது.
ஒரு காலகட்டத்தில் லாபம் கொட்டி வந்த பேஸ்புக் நிறுவனம் தற்போது மெட்டாவாக மாறி,மெட்டா வெர்ஸ் நுட்பத்துக்கு
அதிக செலவை செய்து வருகிறது. இதனால் அந்த நிறுவனத்தின் நன்மதிப்பு பொதுமக்களிடம் இருந்து குறைந்து வருவதுடன்
பலருக்கு அது என்ன நுட்பம் என்பதே புரியவில்லை. மேலும் முதலீட்டாளர்கள் அதிக பணத்தை தெரியாத இடத்தில் கொட்ட
தயாராகவும் இல்லை மெட்டா வெர்ஸ் செயல்பாடு பெரிய அளவில் இல்லாததால் பணமழையில் நனைந்து வந்த பேஸ்புக் நிறுவனம் தற்போது கடந்த சில மாதங்களாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க பங்குச்சந்தையில் மார்கன் ஸ்டான்லி கீ பான்க் ஆகிய நிறுவனங்கள் மெட்டா குறித்த மதிப்பு அறிக்கையை வெளியிட உள்ளனர். இது வெளியாகும்பட்சத்தில் பெரிய அளவு சரிவை மெட்டா நிறுவனம் பெறும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை..
மெட்டா நிறுவனமாக மாறியதில் இருந்து பேஸ்புக் நிறுவனத்துக்கு கட்டுக்கு அடங்காத செலவுதான் மிச்சமாகியுள்ளது.
ஒராண்டில் மட்டும் நிர்வாக செலவாக 87 பில்லியன் டாலர்கள் செலவாகிறது என்கிறது புள்ளி விவரம்
இந்த செலவு 101 பில்லியனாக கூட அடுத்தாண்டு உயரும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.