சீனாவில் ஆப்பிள் போன்கள் உற்பத்தி குறைவுக்கு இதான் காரணமா?
ஐபோன்கள் உலகளவில் மிகவும் பிரபலமாக உள்ளன என்றாலும் அதனை சரியான நேரத்தில் உற்பத்தி செய்யும் பணியில்
சீனாவின் பங்கு முக்கியமாக உள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் கடுமையாக உயர்ந்து
வருகிறது. இதன் காரணமாக உலகிலேயே பெரிய ஐபோன் ஆலை அமைந்துள்ள சீனாவின் ஃபாக்ஸ்கான் ஆலையில் பணியாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, இதனை ஏற்க முடியாமல் ஏராளமான பணியாளர்கள் பாக்ஸ்கான் ஆலையில் இருந்து விலகியுள்ளனர். கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு வர உள்ள நிலையில் உலகம் முழுவதும் ஐபோன்கள் கிடைக்கும் வகையில் சீனா ஐபோன்களை உற்பத்தி செய்து வந்தது. இந்த சூழலில் திடீரென கொரோனா அதிகரித்துள்ளதால் உற்பத்தி குறைந்து வெளிநாட்டு ஏற்றுமதி கணிசமாக சரிந்துள்ளது பாக்ஸ்கான் ஆலையின் பாதுகாவலர்களுடன் பணியாளர்களுக்கு ஏற்பட்ட மோதல் காரணமாகவும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் 30%உற்பத்தி குறைந்துள்ளது குறிப்பிட்ட இந்த ஆலையில் இருந்துதான் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஐபோன் புரோ மாடல் செல்போன்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த சூழலில் இந்தமாத இறுதியில் முழுவீச்சில் உற்பத்தி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரச்னைகள் குறித்து வெளியான தகவல்களால் உலகளவில் ஆப்பிள் நிறுவன பங்குகள் கணிசமாக சரிந்து வருகின்றன. வழக்கமாக பண்டிகை நாட்களில் அதிகம் ஐபோன் விற்பனை ஆகும் நிலையில், இந்தாண்டு பல நாடுகளிலும் ஐபோன் கிடைப்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 2 லட்சம் பேர் பணியாற்ற வசதி கொண்ட ஆலையில் இருக்கும் பிரச்சனையை சரி செய்ய ஆப்பிள் நிர்வாகம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.