உக்ரைனின் பொருளாதாரத்தில் இவ்வளவு சரிவா?
போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் பொருளாதாரம் இந்தாண்டு மட்டும் 32 விழுக்காடு சரிந்துள்ளதாக
மதிப்பிடப்பட்டுள்ளது.அந்நாட்டில் பணவீக்கம் 30 விழுக்தாடு உயர்ந்துள்ளது. இத்தகைய பாதிப்புக்கு ஒரே காரணம் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தொடர் தாக்குதல் என்று உக்ரைனின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டில் பாதுகாப்பு குறைபாடுகள் குறைந்தாலும், எல்லா பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும்,
போர் நடந்து கொண்டிருந்தாலும் உக்ரைனின் உள் நாட்டு உற்பத்தி அடுத்தாண்டு 4 விழுக்காடும், அதற்கு அடுத்த ஆண்டு 5 விழுக்காடாகவும் இருக்கும் என்று அந்நாட்டு வங்கி கணித்துள்ளது.
அந்த நாட்டில் வேலைவாய்ப்பில்லாமல் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 30 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது.
தற்போது அங்குள்ள நிதி சூழல் 2024 வரை இதே நிலையில்தான் இருக்கும் என்றும், நாட்டின் பணவீக்கம் 25 விழுக்காடாக உள்ளதாகவும் இதனை அடுத்தாண்டு 21விழுக்காடாக குறைக்கவும், 2024-ல் 10 விழுக்காட்டுக்கு கீழே குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு சர்வதேச நிதி உதவி மிகுந்த ஆறுதலை அளித்து வருகிறது, 2024ம் ஆண்டுக்குள் உக்ரைனின் உள்நாட்டு உற்பத்தி 2024ம் ஆண்டு 12 விழுக்காடாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய வங்கி குறிப்பிட்டுள்ளது. போர் விரைவில் முடியலாம் என்று எதிர்பார்த்த நிலையில்,நினைத்ததை விட போர் அதிக காலம் நீடித்துக் கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது.