அதிக ரிஸ்க் உள்ள ஐடி கிளைம்களுக்கு வந்த சோதனை..
அதிக ரிஸ்குகள் கொண்ட வருமான வரித்துறை கிளைம்களை அந்த துறைசோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. வருமான வரி கணக்கில் கூறப்பட்டுள்ளது உண்மைதானா என்று விதிகளுக்கு உட்பட்டு ஆய்வு நடத்தப்படுகிறது. ஒரே மின்னஞ்சலை பயன்படுத்தி அதிகப்படியான வருமான வரி தாக்கல் செய்யப்பட்டால் எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்று கூறப்படுகிறது. உதாரணமாக, போலியான வீட்டு வாடகை ரசீது, மோசடியான நன்கொடை உள்ளிட்டவை 80 ஜி பிரிவில் இருக்கும். அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற ஹை ரிஸ்க் வருமான வரியை எப்படி கையாள்வது என்று நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் நிதியமைச்சகம், வருமான வரித்துறைக்கு வழங்கியுள்ளது. சில விதிகளுக்கு உட்பட்டு பொதுவான ஈ-மெயில் மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதனை மண்டல அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பொதுவான மின்னஞ்சலுக்கு காரணமானவர்கள் யார் என்று முதலில் அடையாளம் காணப்பட்டு , அவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நியாயமான வருமான வரி தாக்கலாக இருந்தால் அதனை அப்போதே முடிக்கவும் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது