ஒரு மீட்டிங்கை போட்டாத்தான் சரி வரும் போல இருக்கு!!!!
இந்த மாத இறுதியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகளின் சிஇஓக்களை சந்திக்க உள்ளார். நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் தற்போதைய நிலை, வளர்ச்சி குறித்து இந்த கூட்டத்தில் பேச உள்ளார். முக்கியமாக பட்டியலினத்தவர் மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் குறித்து இந்த கூட்டத்தில் பேசப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதிலும் குறிப்பாக பட்டியலினத்தவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஸ்டாண்ட் அப் இந்தியா, பிரதமரின் முத்ரா யோஜ்னா,உள்ளிட்ட அம்சங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தின் போது பட்டியலினத்தவரின் தேசிய ஆணைய தலைவரும் பங்கேற்க உள்ளார்.
சுய தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ள ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் மூலம் பட்டியலின பெண்களுக்கு வங்கிக் கடனாக 10 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை கடன் கிடைக்கும். இரண்டரை லட்சம் பேருக்கு வங்கிகள் வாயிலாக இந்த திட்டத்தில் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
கடந்த ஜூலை 22ம் தேதி வரை 1 லட்சத்து 44 ஆயிரத்து 223 கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் உற்பத்தி, வணிகம் உள்ளிட்ட துறைகளில் 35 கோடியே 88 லட்சம் பேருக்கு கடன் உதவி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது 19 லட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாய் இந்த திட்டத்தின் மூலம் கடன் அளிக்கப்பட்டுள்ளது