ஐடிசி ஹோட்டல்ஸ்:புத்தாண்டில் புதுவரவு..
கொல்கத்தாவை அடிப்படையாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஐடிசி. இந்த நிறுவனம் அண்மையில் தனது ஹோட்டல் வணிகத்தை மட்டும் தனியாக பிரித்தது. ஐடிசியில் இருந்து ஹோட்டல் வணிகம் மட்டும் தனியாக பிரிவதற்கான அனைத்து பணிகளும் செய்யப்பட்டு வந்தன. இந்த பணிகள் முடிவடைந்து வரும் 1 ஆம் தேதி முதல் சுதந்திரமான ஒரு அமைப்பாக செயல்பட இருக்கிறது. ஐடிசியில் இருந்து ஹோட்டல் பிரிவதற்கு கொல்கத்தாவில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்திருந்தது. கடந்த 16 ஆம் தேதி இதற்கான நகல்கள் ஐடிசி நிறுவனத்துக்கு கிடைத்தன. கடந்தாண்டே பிரிவுக்கான பணிகள் தொடங்கினாலும், கடந்த ஜூன் மாதமே பிரிவுக்கு பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துவிட்டனர். புதிய விதியின்படி ஐடிசி ஹோட்டல்களில் ஐடிசியின் முதலீடு 40 % இருக்கும், மீதமுள்ள 60 %பங்குதாரர்கள் வசம் பங்குகள் இருக்கும். கடந்த செப்டம்பர் இறுதியில் ஐடிசி நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு ஒரு பங்கு 528 ரூபாய் 55 பைசாவாக விற்கப்பட்டது. செப்டம்பர் மாத தரவுகளின்படி, ஐடிசி ஹோட்டல் வணிகம் 12.1%ஆண்டுக்கு ஆண்டு ஏற்றம் கண்டது. பங்குச்சந்தைகளில் முக்கியமான நிபுணர்களின் கணிப்பில் ஐடிசி நிறுவன பங்குகளை வாங்கவேண்டும் என்று தான் நிபுணர்கள் அறிவுறுத்தினர்.