ஐடிசிஹோட்டல் ரெக்கார்ட் தேதி அறிவிப்பு..

கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஐடிசி, புகையிலை, உணவுப்பொருட்கள் என பலபொருட்களை விற்று வரும் இந்த நிறுவனத்தில் உணவக தொழில் தனியாக நடைபெற்றது. இந்த நிலையில் ஐடிசி ஹோட்டல் நிர்வாகத்தை மட்டும் தனியாக பிரிக்கும் முயற்சிகள் கடந்தாண்டு முதல் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் உணவக வணிகம் மட்டும் வரும் ஜனவரி 6 ஆம் தேதி முதல் இயங்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் புத்தாண்டு முதல் ஐடிசி ஹோட்டல்கள் தனியாக இயங்க அனைத்து ஒப்புதல்களும் அளிக்கப்பட்டுவிட்டன. கடந்த 16 ஆம் தேதி தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயம் இதற்கு ஒப்புதல் அளித்து அதன் நகலும் அளிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதமே பிரிவுக்கு பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துவிட்டனர். போட்டி ஆணையமும் கடந்த மேமாதமே இதற்கு இசைவு தெரிவித்தது.
ஐடிசி ஹோட்டல்களில் 40% உரிமை ஐடிசி நிறுவனத்திடமும், மீதம் உள்ளவை பங்குதாரர்கள் உரிமையுடனும் இருக்கும். கடந்த செப்டம்பர் மாத இறுதியில் ஐடிசி நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத வகையில் 528 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. செப்டம்பருடன் முடிந்த காலாண்டில் ஐடிசி ஹோட்டல் வணிகம் 12.1%வளர்ச்சியை ஆண்டுக்கு ஆண்டு செய்தது. டலால் தெருவில் ஐடிசியை வாங்கலாம் என்றே பெரும்பாலான நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். 35-ல் 2 பேர் மட்டுமே ஐடிசி பங்குகளை விற்கலாம் என்று அறிவுறுத்தினர். மற்ற அனைவரும் வாங்கவே கூறுகின்றனர்