ஐடிசி அப்டேட்..

கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஐடிசி. இந்த நிறுவனம் டிசம்பர் 30 ஆம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஐடிசியில் இருந்து பிரிந்து சென்ற ஐடிசி ஹோட்டல்ஸ் நிறுவனம், பங்குச்சந்தைகளில் அடுத்த 60 நாட்களில் பட்டியல் இடப்படும் என்று கூறியுள்ளது. ஏற்கனவே ஐடிசியில் இருந்து ஐடிசி ஹோட்டல்கள் மட்டும் தனியாக பிரிந்து செல்ல தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயம் கடந்த 16 ஆம் தேதி அனுமதி அளித்திருந்தது. ஐடிசி ஹோட்டல்களின் வணிகம் வரும் 1 ஆம் தேதி முதல் தனியாக தொடங்க இருக்கிறது. ஜனவரி 6 ஆம் தேதி ரெக்கார்ட் தினமாக ஐடிசி நிறுவனம் அறிவித்துள்ளது. ஃபார்டியூன் பார்க் ஹோட்டல், ஸ்ரீனிவாசா ரெசார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் 1500 கோடி ரூபாய் ரொக்கப்பணமும் ஐடிசி ஹோட்டல் நிறுவனத்துக்கு கைமாற இருக்கிறது. ஐடிசியில் இருந்து ஐடிசி ஹோட்டல்களை தனியாக பிரிக்க கடந்த ஜுன் மாதத்தில் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்தனற். 99.6விழுக்காடு மக்கள் பிரிவுக்கு ஒப்புதல் அளித்து வாக்களித்தனர். திங்கட்கிழமை வர்த்தகம் முடியும்போது ஐடிசி நிறுவன பங்குகள் 477ரூபாய் 10 பைசாவாக விற்கப்பட்டன. இது 1.80 ரூபாய் குறைவாகும். மும்பை பங்குச்சந்தையில் இந்த விலை குறைப்பு இருந்தது.