ஐடிசியில் இருந்து BAT வெளியேறுகிறதா?
பிரிட்டிஷ் அமெரிக்க புகையிலை நிறுவனம்தான் BAT என்று அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனம் இந்தியாவின் ஐடிசி நிறுவனத்தில் பெரிய தொகையை முதலீடு செய்துள்ளது. இந்நிலையில் அண்மையில் ஐடிசி நிறுவனத்தில் இருந்து ஹோட்டல்கள் வணிகம் மட்டும் பிரிந்து செல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் BAT நிறுவனம் தனது ஹோட்டல் பங்குகளை உரிய நேரத்தில் விற்பனை செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஐடிசியில் தங்கள் வணிகம் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐடிசியின் ஹோட்டல் பிரிவு வணிகம் மட்டும் கடந்த 24 மாதங்களில் 140 சொத்துகளை வாங்கி குவித்துள்ளது. இதனை விரைவில் 200ஆக உயர்த்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
உணவுக பிரிவில் பாட் நிறுவனம் ஐடிசியில் 15.27விழுக்காடாக பங்குகளை வைத்துள்ளது. ஏற்கனவே ஐடிசி நிறுவனத்தில் வைத்திருந்த 29 .1%பங்குகளை, 25.6% ஆக BAT நிறுவனம் குறைத்தது. பாட் நிறுவனம் விரைவில் புதிய நிகோடின் பொருளையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் இது குறித்து ஐடிசிஎந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.