வர வர இதே வேலையா போச்சு!!!!
கணினி மற்றும் பிரிண்டர்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக உள்ளது எச் பி எனும் ஹிவ்லட் பக்கார்ட் நிறுவனம்
இந்த நிறுவனம் கடந்தசெவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தங்கள் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை இருக்கும் என்றும், விற்பனை 11விழுக்காடு குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள இந்த நிறுவனத்தின் கிளையில் மட்டும் 51 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த சூழலில் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ஹெச்.பி. நிறுவனம் மொத்தம் 4 முதல் 6 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. பணியாளர்களில் சிலரை பணியில் இருந்து நீக்குவதால் மிச்சமாகும் தொகையை எடுத்து மீண்டும் நிறுவனத்திலேயே முதலீடு செய்ய இருப்பதாகவும் அந்த நிறுவன செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருங்காலங்களில் ஹெ்ச்பி நிறுவன வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் சேவை செய்ய காத்திருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான, அமேசான், கூகுள், பேஸ்புக்கின் மெட்டா வரிசையில் தற்போது
எச்.பி. நிறுவனமும் இணைந்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்தில் உள்ள பணியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.