தமிழ்நாட்டில் உருவாகும் ஜேஎல்ஆர் மின்சார கார்..

பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஜாகுவார் லேன்ட்ரோவர் கார் தயாரிப்பு நிறுவனத்தை டாடா மோட்டார் நிறுவனம் வாங்கியது முதல் அந்த கார்களுக்கு மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் தென்னிந்தியாவில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளது. உள்ளூரில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு சரியான பணம் மற்றும்தரத்தில் சமநிலை இல்லை என்ற கருத்து நிலவியது. மேலும் மின்சார கார்களுக்கு மவுசு குறைந்து வருவதாகவும் அந்நிறுவனம் கருதுகிறது.
உலகளவில் பெரிய கார் நிறுவனங்கள் தங்கள் மின்சார கார்களை இந்தியாவில் விற்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்,இதில் குறிப்பாக சீன நிறுவனங்களும் உள்ளன. டாடாவின் பயணிகள் வாகனங்களுக்கு பதிலாக அதே உபகரணங்களை வைத்து ஜாகுவார் லேன்ட் ரோவர் மின்சார கார்களை தயாரிக்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புதிய ஆலையில்வரும் செப்டம்பர் முதல் உற்பத்தி தொடங்கும் என்றும், ஓராண்டில் 2.5லட்சம் கார்களை உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளது. ராணிப்பேட்டையில் உள்ள ஆலையில் 75ஆயிரம் ஜேஎல்ஆர் கார்களும், 25 ஆயிரம் டாடா மின்சார வாகனங்களும் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. டாடா நிறுவன கார்களுக்கு கடும் போட்டி உருவாகியுள்ள நிலையில், டெஸ்லா நிறுவனமும் இந்தியாவிற்குள் கால்பதிக்க உள்ளது. இந்த நிலையில் ஜேஎல்ஆர் கார்களை உற்பத்தி செய்ய அந்நிறுவனம் அதிக கவனம் செலுத்துகிறது.