கார் பழுதுநீக்கும் நிறுவனத்தில் ஜப்பானிய வங்கி முதலீடு?
2016ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட நிறுவனம் கோ மெக்கானிக் . பெரிய நிறுவனங்களின் தரத்தில் கார்களுக்கு பழுதுநீக்கும் பணியை, முன்னணி நிறுவனங்களை விட 40 விழுக்காடு குறைவான பணத்தில் சேவை வழங்கி வந்த இந்த நிறுவனம் குறுகிய காலத்தில் பிரபலமைடந்த்து. இந்நிலையில் ஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட் பேங்க் என்ற நிறுவனம் கோ மெக்கானிக்கிடம் கடந்த 9 மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பெரிய பெரிய நிறுவனங்களுக்கு அதிக தொகை கொடுத்து கடந்தாண்டு முதலீடு செய்து சாஃப்ட் பேங்க் நிறுவனம் பெரிய நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தற்போது வெறும் 35 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே முதலீடு செய்ய இறுதிகட்ட முடிவு எட்டப்பட்டது. ஏற்கனவே சாஃப்ட் பேங்க் நிறுவனம் அன் அகாடமி மற்றும் பேடி எம் உள்ளிட்ட நிறுவனங்களில் பெரிய தொகையை முதலீடாக செலுத்தி கடந்தாண்டு மட்டும் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை சாப்ட் பேங்க் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது