இக்கட்டான சூழலில் ஜெரோம் பாவல்..
உலகமே உற்றுப்பார்த்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் கூட்டம் முடிந்து, கடன்கள் மீதான வட்டி விகித்த்தை பெட்25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. அதாவது அமெரிக்காவில் கடன்கள் வாங்கினால் வட்டி விகிதம் 4.5 முதல் 4.75 விழுக்காடு என்ற அளவில் இருக்கும். இது கடந்தாண்டு பிப்ரவரிக்கு பிறகு நடக்கும் குறைந்தபட்ச அளவாகும். கடந்த செப்டம்பரில் 18 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் 50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டன. வருங்காலங்களிலும் கடன்கள் மீதான வட்டி விகிதம் குறைக்க வாய்ப்பிருப்பதாக பெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பாவல் குறிப்பிட்டார். வழக்கமாக டொனால்ட் டிரம்ப்பின் நடவடிக்கைகளால் அமெரிக்காவில் விலைவாசி என்பது எப்போதுமே உயரும். இந்நிலையில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய கட்டாயம் கூட ஏற்படும் என்று மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அமெரிக்க அதிபராக பதவியேற்க இருக்கும் டிரம்ப், எலான் மஸ்கை எபிசியன்சி ஆணையத்தின் தலைவராக நியமிக்கும் பட்சத்தில், அடுத்த பட்ஜெட்டில் 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு பணம் தேவைப்படும். இது அமெரிக்காவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று கூறப்படுகிறது. எனினும் பணவீக்கத்தை குறைப்பது அமெரிக்காவிற்கு தற்போதைய அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் மீண்டும் விலைவாசி உயர்ந்தால் கடன்கள் மீதான வட்டி விகித்ததை பெடரல் ரிசர்வ் நிறுத்தி வைக்கும் சூழல் ஏற்படும். எனவே பெடரல் ரிசர்வுக்கு இது ஒரு சவாலான நிலைதான். பெடரல் ரிசர்வின் தலைவராக தற்போது உள்ள பாவலின் பதவிக்காலம் வரும் 2026 வரை உள்ளது. அதுவரை பாவல் எப்படி சமாளிப்பார் என்பதை காலம்தான் முடிவு செய்யும்