ஜியோ ஃபைனான்ஸ் நிறுவன அப்டேட்…
ரிலையன்ஸ் ஜியோ அண்மையில் நிதி சேவை நிறுவனத்தை ஜியோ பைனான்ஸ் என்ற பெயரில் தொடங்கியிருக்கிறது.
இந்த நிறுவனத்தை லார்ஜ் கேப் என்ற வகையில் பரஸ்பர நிதி சங்கம் உயர்த்தி இருக்கிறது. டாடா டெக், ஜேஎஸ்டபிள்யு இன்ஃபிரா மற்றும் IREDA ஆகிய நிறுவனங்களும் இந்த லார்ஜ் கேப் வசதியில் இடம்பிடித்துள்ளன. வழக்கமாக லார்ஜ்கேப் என்றால் அதன் அளவு 49700 கோடியில் இருந்து 67,000 கோடி ரூபாயாக இருக்கும் என்று ஜூன் மாதம் கணிக்கப்பட்டது. மிட்கேப் என்ற நடுத்தர அளவு என்பது 22,000 கோடி ரூபாயாகும். இதற்கு முன்பு 17400 கோடிரூபாய் இருந்தாலே அது நடுத்தர பரஸ்பர நிதியாக வகை படுத்தப்பட்டிருந்தது. புதிதாக மாற்றப்பட்டுள்ள பரஸ்பர நிதி வரையறை வரும் பிப்ரவரியில் இருந்து அமலாக இருக்கிறது. Power Finance Corporation, IRFC, Macrotech Developers, Polycab India, REC, Shriram Finance, Union Bank IOB, ஜியோ பைனான்ஸ்சியல் சர்வீசஸ் ஆகிய 8 நிறுவனங்கள் நடுத்தரத்தில் இருந்து பெரிய ரக பரஸ்பர நிதி பிரிவுக்கு உயர்ந்துள்ளன. சிறிய ரக பங்கில் இருந்து நடுத்தரத்துக்கு சில நிறுவனங்கள் உயர்ந்திருக்கின்றன. Mazagon Dock, Suzlon Energy, Lloyds Metals, SJVN, Kalyan Jewellers, KEI Industries, Credit Access Grameen, Exide Industries, Nippon Life, Ajanta Pharma, Narayana Hrudaya, Glenmark Pharma ஆகிய நிறுவனங்கள் இதில் குறிப்பிடத்தகுந்தவை.. பரஸ்பர நிதி சங்கமான AMFI அளவுகளை மாற்றியுள்ளதால் நிதி ஆலோசகர்களுக்கு பணிகள் அதிகரித்துள்ளன, இதனால் சந்தையில் நிதி புழக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது