வீட்டுக்கடன் முதல் காப்பீடு வரை வழங்கும் ஜியோ பைனான்ஸ்..
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி தலைமையில் இயங்கும் ஜியோ நிதி சேவைகள் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் எவ்வளவு வருவாய் வந்தது என்ற அறிவிப்பு அது. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஜியோ நிதி சேவைகள் நிறுவனம் சந்தை மூலதனமாக 2லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் வைத்துள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் வீட்டுக்கடன் முதல் டேர்ம் லைஃப் இன்சூரன்ஸ் வரை அனைத்து பொருட்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. பரஸ்பர நிதியின் மீதான கடன், வீட்டுக்கடன், வாகன மற்றும் இருசக்கர வாகன காப்பீடு உள்ளிட்டவை ஜூலையில் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த செப்டம்பரில் சொத்துகள் மீது கடன் , ஆயுள் காப்பீடு, பாதுகாப்பு ஆவணங்கள் மீதான கடன்களும் கடந்த செப்டம்பரில் வழங்கப்பட்டதாக ஜியோ நிதி சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது. பிளாக்ராக் நிறுவனத்துடனும் இணைந்து புதிய கூட்டு நிறுவனம் செயல்படும் என்றும் முகேஷ் அம்பானி அறிவித்திருந்தார். சொத்து நிர்வாகம் மற்றும் பங்குச்சந்தை தரகு சேவைகளையும் அளிக்க ஜியோ நிதி சேவைகள் நிறுவனம் அறிவித்தது. ஜயோ நிதி சேவைகளில் அறிமுகமாக உள்ள பங்குச்சந்தை வணிகம் வாயிலாக வாடிக்கையாளர்கள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யவும், பரஸ்பர நிதியில் முதலீடு செய்யவும் இயலும்.