22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

ஆலையை விற்பனை செய்த ஜான்சன் & ஜான்சன்….

குழந்தைகளுக்கான அழகுசாதனம் மற்றும் உடல்நலம் சார்ந்த பொருட்களை தயாரிப்பதில் உலகப்புகழ் பெற்ற நிறுவனம் ஜான்சன் அண்ட் ஜான்சன், இந்த நிறுவனத்தின் ஆலை தெலங்கானா மாநிலம் பஞ்சர்லா பகுதியில் இயங்கி வருகிறது.
இந்த ஆலையை முன்னணி மருந்து நிறுவனமான ஹெட்டிரோ வாங்கியுள்ளது. 130 கோடி ரூபாய்க்கு இந்த ஆலை கைமாறியுள்ளது மேலும் குறிப்பிட்ட இந்த ஆலையை தரம் உயர்த்த 600 கோடி ரூபாயை செலவிட
உள்ளதாக ஹெட்டிரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.குறிப்பிட்ட இந்த ஆலை,55.27 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக உள்ளது. கைமாறியுள்ள புதிய நிறுவனம், இந்த ஆலையில் புதிதாக 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாக
அறிவித்துள்ளது மிகவும் மலிவான இந்த விலைக்கு ஆலை கைமாற்றியதில் PWCநிறுவனம் நிதி ஆலோசகராக செயல்பட்டது தெரியவந்துள்ளது. கிடைத்த லாபகரமான இடத்தில் மருந்துப்பொருட்களை உற்பத்தி செய்ய உள்ளதாக ஹெட்டிரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *