உலகின் மதிப்புமிக்க ஸ்டீல் மேக்கர் ஜேஎஸ்டபிள்யூ..

உலகின் மதிப்பு மிக்க ஸ்டீல் உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம். இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 30.31பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. மற்ற நாடுகளைச் சேர்ந்த அர்செலார் மிட்டல் நிறுவனத்தின் மூலதனம் மிகவும் குறைவாக உள்ளது. விஜயநகர், டோல்வி, சேலம் ஆகிய நகரங்களில் இயங்கி வரும் இந்த நிறுவனம், அமெரிக்கா மற்றும் இத்தாலியிலும் பணிகளை செய்து வருகிறது. இந்த நிறுவனம் மொத்தமாக 35.7 மில்லியன் டன் அளவுக்கு ஸ்டீல் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கிறது. இதனை 43.5 மில்லியன் டன்னாக வரும் 2028-லும், 31-ல் 51.5 மில்லியன் டன்னாகவும் உயர்த்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
உலகின் மிதிப்புமிக்க ஸ்டீல் நிறுவனமாக தங்கள் நிறுவனம் வளர்ந்துவிட்டதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பார்த் ஜிண்டால், தங்கள் நிறுவனத்துக்கு பாராட்டுகள் என்றும் தெரிவித்துள்ளார்., இந்தாண்டு மட்டும் ஜேஎஸ்டபிள்யூ நிறுவன ஸ்டீல் பங்குகள் மட்டும் 18 விழுக்காடு உயர்ந்துள்ளது. நிஃப்டி 50 பங்குச்சந்தைகளில் சிறப்பாக செயல்படும் பங்குகளில் ஒன்றாகவும் இந்த நிறுவன பங்குகள் திகழ்கின்றன. டாடா ஸ்டீலின் சந்தை மதிப்பை விடவும் அதிகமான சந்தை மதிப்பான 30.31 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் கொண்டுள்ளது. ஆயிரத்து 100 ரூபாய் டார்கெட் விலை வந்தால் வாங்கலாம் என்றும் நிபுணர்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர்.
1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனம், மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. கர்நாடகத்தில் ஒருங்கிணைந்த ஆலையையும் வைத்துள்ளது. ஆட்டோமொபைல், கட்டுமானப் பொருட்கள் இந்த நிறுவனத்தின் பிரதான தயாரிப்புகளாக உள்ளது. இந்தியாவின் ஸ்டீல் உற்பத்தியும் 3.5 விழுக்காடு உயர்ந்து 37.38 மில்லியன் டன்னாக கடந்த நிதியாண்டின் 3 ஆம் காலாண்டில் திகழ்ந்தது. இந்தியாவில் ஸ்டீலை பயன்படுத்தும் விகிதம் 6%ஆக உயர்ந்து 38.46 மில்லியன் டன்னாக மாற உள்ளது. 2025 நிதியாண்டில் ஆண்டுக்கு ஆண்டு ஸ்டீலை வாங்குவோரின் விகிதம் 10 விழுக்காடாக இருப்பதாக தெரிகிறது.