கொக்க கோலாவின் இந்திய பங்குகளை வாங்குகிறது ஜூபிலன்ட்..

இந்தியாவில் பிரபல உணவு நிறுவனமாக திகழும் ஜூபிளண்ட் ஃபுட் ஒர்க்ஸ் நிறுவனம், கொக்கக் கோலா நிறுவனத்தின் இந்திய உரிமையை வாங்கியுள்ளது. ஏற்கனவே டாமினோஸ், டன்கின் டோனட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் ஜூபிளண்ட் நிறுவனம் கொக்க கோலாவை விநியோகித்து வருகிறது. அண்மையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, இரு நிறுவனங்களும் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தங்கள் உரிமைகளை மாற்றிக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில்தான் ஜூபிளண்ட் நிறுவனத்திற்கு 40% பங்குகளை விற்பது குறித்து கொக்கக் கோலா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. லிம்கா, ஸ்பிரைட், தம்ப்ஸ்அப் உள்ளிட்ட குளிர்பானங்கள் கொக்கக் கோலா நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. போதுமான பாட்டில் தயாரிப்பும் இந்தியாவிலேயே இருப்பதால் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் எளிதாக முடிகிறது. இந்தியாவின் தயாரிப்புகளை ஜூபிளண்ட் நிறுவனம் சந்தை படுத்த தயாராக இருப்பதாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பிரபலமான கொக்கக் கோலா நிறுவனம், இந்தியாவில் தனது பாட்டில்உற்பத்திகளை கைமாற்றுவதால், சொத்துகளை நிர்வகிப்பது எளிதாக இருக்கிறது.