கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்கு ஏற்றம்…
பிரபல நகைக்கடை நிறுவனமான கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் பங்குகளை 3585 கோடி ரூபாய்க்கு அதன் புரமோட்டர்கள் திருக்கூர் சீதாராமன ஐயர் கல்யாண ராமன் என்பவருக்கு விற்கப்போவதாக வெளியான தகவலால் பங்கு விலை கடுமையாக உயர்ந்தது. ஹைடெல் இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனம் இந்த பங்குகளை வைத்திருந்தது. பங்குகள் விற்கப்படுவதால் அந்நிறுவன பங்கு விலை 589 ரூபாயாக தேசிய பங்குச்சந்தையில் உயர்ந்திருக்கிறது. 6.6 கோடி பங்குகளை ஒரு பங்கு 539 ரூபாய் என்ற விலைக்கு விற்கப்பட்டுள்ளது. 2.42 கோடி ஈக்விட்டி பங்குகளை புரோமோட்டர்களுக்கு ஹைடெல் நிறுவனம் விற்றுள்ளது. இந்த பரிவர்த்தனைகள் மூலமாக கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தில் புரமோட்டர்களின் பங்கு 62.95விழுக்காடாக அதிகரித்துள்ளது. ஹைடெல் வசம் கடந்த ஜூன் மாத இறுதி வரை 9.17 விழுக்காடு பங்குகள் இருந்தன. அதில் தற்போது 2.36%விற்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு முதலீடுகள் மெல்ல மெல்லஅந்நிறுவனத்தில் இருந்து குறைந்து வருகிறது. 29.65 %-ல் இருந்து தற்போது 21.19%ஆக சரிந்துள்ளது. கடந்த 2022-ல் 2.63%ஆக இருந்த இந்திய முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு தற்போது 11.75%ஆக உயர்ந்திருக்கிறது. இந்த பங்குகள் கடந்த 3 மாதங்களில் மட்டும் 140%வளர்ச்சியடைந்துள்ளன. கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 177 கோடி ரூபாயாகவும், வருவாய் 26.5%உயர்ந்து 5535 கோடி ரூபாயாகவும் உள்ளது.