வரும் 1 ஆம் தேதி விலை ஏறப்போகுதாம்?

இந்தியாவில் கியா கார்களின் விலை வரும் 1 ஆம் தேதி முதல் 3 விழுக்காடு உயரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்த விலையு உயர்வு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கியா நிறுவனம் செல்டாஸ், சோனட், காரன்ஸ் உள்ளிட்ட நிறுவன கார்களை விற்று வருகிறது. இந்தாண்டில் கியா உயர்த்தும் புதிய விலை இதுவாகும். அந்நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவரான ஹர்தீப் சிங் பிரார் கூறும்போது, தொழில்நுட்பத்தில் புதுமையான பொருட்களை அளிக்க கியா நிறுவனம் எப்போதும் தயாராக இருக்கிறது என்றார். உள்ளீட்டுப்பிரிவு முதலீடுகள் அதிகம் தேவைப்படுவதாலும்,விலைவாசி அதிகரிப்பு காரணமாகவும், மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாகவும் வேறு வழியின்றி குறைவான அளவில் விலையை உயர்த்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கியா நிறுவனம் ஆண்டுக்கு 16 லட்சம் கார்களை விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.வாடிக்கையாளர்கள் பர்ஸை பதம் பார்க்காமல் இருக்கும் வகையில் லேசான விலையேற்றம் செய்திருப்பதாகவும் அந்நிறுவன மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.