புதிய விதிகளை தெரிஞ்சிக்குங்க…
ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு செல்ல வேண்டுமானால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது
உங்கள் பாஸ்போர்ட்டில் உள்ள முதல் பெயர் மற்றும் இரண்டாவது பெயரை இனி அதிகாரிகள் கேட்டால் சொல்ல வேண்டும்.அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் கடந்த 21ம் தேதி முதலே அமலுக்கு வந்துவிட்டது.
இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு அதிகம் பேர் செல்வார்கள் என்பதால், முன்னணி விமான நிறுவனங்களான
ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ்,ஸ்பைஸ்ஜெட் மற்றும் இண்டிகோ நிறுவனங்களுக்கு இது தொடர்பாக அறிவுறுத்தல்களை
அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் வசிக்கும் நிரந்தர தங்கும் அனுமதி மற்றும் வேலைக்காக செல்வோர் இதனை பின்பற்ற வேண்டியது இல்லை என்றும் சுற்றுலா விசாவில் செல்வோருக்கு மட்டுமே இந்த கட்டுப்பாடுகள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சர் நேம் எனப்படும் இரண்டாவது பெயர் இல்லாமல் பாஸ்போர்ட் எடுத்திருந்தால் அவர்களுக்கு அரபு நாடுகளில் தற்போது சுற்றுலா விசா அளிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி பல சுற்றுலா பயணிகளுக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.