கறி முட்டை பஞ்சாயத்து..
ஆய்வகத்தில் உருவாக்கப்படும் இறைச்சி, பால்பொருட்கள், மற்றும் முட்டை சார்ந்துள்ள பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்க இருக்கிறது. பொதுமக்களின் பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சூழலியல் சமநிலை உள்ளிட்ட அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. இது தொடர்பாக FSSAI அமைப்பு விரைவில் ஒரு கட்டமைப்பு மற்றும் விதிகளை வகுக்க இருக்கிறது. இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுத்தியுள்ளார். அதில் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்று கோரியுள்ளார். பதப்படுத்துதலில் பெரிய மாற்றங்களை மத்திய அரசு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாக மேனகா காந்தி கூறியுள்ளார். அமெரிக்கா, சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண வரைமுறைகள்வ குக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குறிப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா கூறியுள்ளார். விலங்குகளை கொல்லாமல் இறைச்சி தயாரிப்பது குறித்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே திட்டங்கள் வகுக்கப்பட்டன. இந்த வகை இறைச்சிகளால் நோய் இருக்காது, விலங்குகளை கொல்லவேண்டாம். உலகமெல்லாம் வேறு சில பெயர்களில் இந்த மாற்று இறைச்சி முறைகள் இருந்தாலும் இந்தியாவில் இது ஸ்மார்ட் இறைச்சி என்று அழைக்கப்படுகிறது. இதனை உருவாக்க குறைவான தண்ணீர் மற்றும் ஆற்றலே போதுமானதாகும். இந்த செயற்கை மாமிசம் குறைவான காலகட்டத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியா தான் உலகிலேயே அதிகம் எருமை கறியை உற்பத்தி செய்யும் நாடு, இதே போல் உலகிலேயே இரண்டாவது அதிக ஆட்டிறைச்சியையும் இந்தியா தான் உற்பத்தி செய்கிறது. இந்தியாவில் 2022-23 காலகட்டத்தில் 21லட்சம் டன் அளவுக்கு கால்நடைகள் வளர்க்கப்படுவதாகவும். 13.6மில்லியன் டன் எருமைகளும், 73.7மில்லியன் டன் அளவுக்கு ஆடுகளையும் விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். இதில் ஆட்டிறைச்சி மட்டும் 77.68 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இறைச்சி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன