விரைவில் வருகிறது லீலா பேலஸ் ஐபிஓ..
புரூக்ஃபீல்டு சொத்து நிர்வகிக்கும் நிறுவனத்துக்கு சொந்தமானது லீலா பேலஸ் ஹோட்டல்கள். இந்த ஹோட்டல்கள் இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவுக்கு தயார் படுத்தி வருகின்றன. செபியின் ஒப்புதலுக்காக இந்த ஐபிஓ தயாராக இருக்கிறது.
முதல்கட்டமாக 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 2 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. Kotak Mahindra Capital, JM Financial, BofA Securities, Morgan Stanley, JP Morgan, Axis Capital, Citi, ICICI Securities, IIFL Capital , Motilal Oswal, SBI Caps ஆகிய 11 வங்கிகள் இந்த ஐபிஓவில் முதலீட்டு வங்கிகளாக இருக்கின்றன. டெல்லி, உதய்ப்பூர், பெங்களூரு, சென்னை என 4 லீலா பேலஸ் ஹோட்டல்களை புரூக்ஃபீல்ட் நிறுவனம் கடந்த 2019-ல் வாங்கியது. அன்குர் குப்தா என்பவர் ஆசிய பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் தலைவராக இருக்கிறார். இவர் அண்மையில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முன்னோடி நிறுவனமான புரூக்ஃபீல்ட் நிறுவனம், லீலா பேலஸ் ஹோட்டல்களில் முதலீடு செய்துள்ளது. மிகப்பெரிய மூலதனம் என்றார்.
இந்தியாவில் 20 இடங்களில் லீலா பேலஸ் ஹோட்டல்களை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 15 ஹோட்டல்களை அந்நிறுவனம் கொண்டுள்ளது. வென்சர் ஹால்பிடாலிட்டி என்ற புனேவைச் சேர்ந்த நிறுவனம் பிளாக்ஸ்டோன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளது. 2,000 கோடி ரூபாய்க்கான ஐபிஓவில் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து பணியாற்ற இருக்கின்றன.