வங்கியை வித்து காசு எடுத்துக்க போறோம்!!!!
இந்தியாவில் பிரபலமானதாக இருந்த ஐடிபிஐ வங்கி தற்போது எல்ஐசியின் கட்டுப்பாட்டில் உள்ளது
21 ஆயிரத்து 624 கோடி ரூபாய்க்கு இந்த வங்கியை தனியார் மயமாக்கும் பணியில் எல்ஐசி ஈடுபட்டுள்ளது.
இந்த வங்கியை தனியார் மயமாக்கும் பணி கடந்தாண்டு மே மாதம் துவங்கியது. 2019ம் ஆண்டுக்கு முன்பு இருந்த விலைக்கு
ஐடிபிஐ வங்கி பங்குகள் தற்போது வந்துள்ளன.
ஐடிபிஐ நிறுவனத்தின் 94 விழுக்காடு பங்கு தற்போது எல்ஐசி மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் எல்ஐசியிடம் 49 விழுக்காடு மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 45.48 விழுக்காடும் உள்ளன வங்கியை தனியார் மயப்படுத்துவதற்கு தேவையான விண்ணப்பங்கள் குறித்த அறிவிப்பு கடந்த 7ம் தேதி கொண்டு வரப்பட்டது.
22,500 கோடி ரூபாய் பணத்தை தனிப்பட்ட நிறுவனம் செலுத்தும்போது அந்த தொகை எல்ஐசிக்கு கிடைக்கும்.
யாருக்கு ஐடிபிஐ வங்கியை அளிப்பது என்பது குறித்த இறுதி முடிவை ரிசர்வ் வங்கியே இறுதி செய்ய உள்ளது.
இந்த வங்கியை தனியார் நிதி நிறுவனங்கள் கைப்பற்ற அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.